'வரும் தேர்தலில் நம் கொள்கை எதிரிகளை தோற்கடிக்க வேண்டும்'

2

சூலுார்: ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு. க., சார்பில், மகளிரணி, மகளிர் தொண்டரணி, மகளிர் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சூலுார் அடுத்த முதலிபாளையத்தில் நடந்தது. மகளிரணி மாவட்ட நிர்வாகிகள், எம்.பி., கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் பேசினர்.

தி.மு.க., துணை பொதுச்செயலாளரும், எம்.பி., யுமான கனிமொழி பேசியதாவது:



தேர்தல் பணிகளிலும், கட்சி போராட்டங்களிலும் முன்னணியில் நிற்பவர்கள் மகளிரணியினர் தான். தி.மு.க., தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறது. தமிழகத்தில் மட்டும் தான், 45 சதவீத மகளிர் வேலைக்கு செல்கின்றனர். தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க முயல்கிறது மத்திய அரசு. மொழித்திணிப்பை ஏற்க மாட்டோம்.

பெண்களுக்காக தமிழக அரசு, உரிமைத் தொகை, இலவச பஸ் பயணம், கல்லுாரி படிப்புக்கு ஊக்கத்தொகை, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு என பல திட்டங்களை செயல்படுத்துகிறது. இந்த சாதனைகளை மக்கள் மத்தியில் மகளிரணி பிரசாரம் செய்ய வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் நம் கொள்கைக்கு எதிரானவர்களை தோற்கடிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement