ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.3 ஆக பதிவு

குயுட்டோ; ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுவது உண்டு. அந்த வகையில் இன்று (ஏப்.25) அங்குள்ள கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
எல்லை மாகாணமான எஸ்மராஸ்டாசில் 35 கி.மீ.,ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.
தலைநகர் குயுட்டோவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. ஆனால் அதன் எதிரொலியாக ஏதேனும் பாதிப்புகள், சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்ற தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லையில் நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவம் பதிலடி
-
சொத்து குவிப்பு வழக்கில் இன்னொரு அமைச்சருக்கும் சிக்கல்; பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து
-
10 நகரங்களில் வெயில் சதம்: வானிலை மையம் தகவல்
-
'வரும் தேர்தலில் நம் கொள்கை எதிரிகளை தோற்கடிக்க வேண்டும்'
-
பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
-
பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு
Advertisement
Advertisement