பங்கு சந்தை நிலவரம்

போர் பதற்றத்தால் சரிவு



வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று நிப்டி மற்றும் சென்செக்ஸ் இறக்கத்துடன் நிறைவு செய்தன. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதால், முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கையாக பங்குகளை விற்று லாபத்தை பதிவு செய்தனர்.



இதனால், தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக சந்தை குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன. நிப்டி, சென்செக்ஸ் தலா 1 சதவீதத்துக்கு மேல் சரிவை கண்டன. நேற்றைய சரிவால்,
முதலீட்டாளர்கள் 8.88 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர்.




சரிவுக்கு காரணங்கள்


1. பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை குறித்த பதற்றம்


2. முன்னெச்சரிக்கையால் லாபத்தை பதிவு செய்த முதலீட்டாளர்கள்



3. கைகொடுக்காத நிறுவனங்களின் நான்காவது காலாண்டு முடிவுகள்.


உலக சந்தைகள்


அமெரிக்கா --  சீனா இடையே வர்த்தகப் பேச்சில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், பெடரல் ரிசர்வ் வட்டி குறைப்பு குறித்த எதிர்ப்பார்ப்பு மற்றும் நிறுவனங்களின் கலவையான லாபம் ஆகியவை காரணமாக, அமெரிக்க பங்கு சந்தைகள் மூன்றாவது நாளாக உயர்வுடன் நிறைவடைந்தன. இதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய, ஆசிய சந்தைகளும் உயர்வுடன் வர்த்தகமாகின.


விலை குறைந்த பங்குகள் (நிப்டி 50)


 ஸ்ரீராம் பைனான்ஸ்: 6%


 அதானி என்டர்பிரைசஸ்: 4%


 அதானி போர்ட்ஸ்: 4%

 ஆக்ஸிஸ் வங்கி: 3 %

அன்னிய முதலீடு



அன்னிய முதலீட்டாளர்கள் 2,952 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.

கச்சா எண்ணெய்



உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.50 சதவீதம் உயர்ந்து,
66.24அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு



அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசா குறைந்து, 85.41 ரூபாயாக
இருந்தது.

Advertisement