ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் இந்தியா 5வது இடம்; இதோ பட்டியல்!

புதுடில்லி: ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானை விட 9 மடங்கு அதிகமாக இந்தியா செலவு செய்கிறது.
காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்ட இந்தியா ராணுவம் தயாராக உள்ளது. இந்ந சூழலில் , ஸ்டாக்ஹோம் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் ராணுவத்திற்கு பல்வேறு நாடுகள் செலவிடும் ரூபாய்கள் குறித்து தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
ராணுவத்தில் அதிக பணம் செலவிடும் 'டாப் 10' நாடுகள் விபரம் பின்வருமாறு:
1. அமெரிக்கா - 997 பில்லியன் டாலர்கள்
2. சீனா- 314 பில்லியன் டாலர்கள்
3. ரஷ்யா- 149 பில்லியன் டாலர்கள்
4. ஜெர்மனி- 88 பில்லியன் டாலர்கள்
5. இந்தியா- 86 பில்லியன் டாலர்கள்
6. இங்கிலாந்து- 82 பில்லியன் டாலர்கள்
7. சவுதி அரேபியா- 80 பில்லியன் டாலர்கள்
8. உக்ரைன்- 65 பில்லியன் டாலர்கள்
9.பிரான்ஸ்- 65 பில்லியன் டாலர்கள்
10. ஜப்பான்- 55 பில்லியன் டாலர்கள்
(குறிப்பு: ஒரு பில்லியன் டாலர் மதிப்பு இந்திய ரூபாய் படி ரூ.8 ஆயிரத்தி 520 கோடி
ஆகும்)
அதேநேரம் பாகிஸ்தான் வெறும் 10 பில்லியன் ராணுவ செலவுடன் 29வது இடத்தில் உள்ளது. இந்திய ராணுவம் பாகிஸ்தானை விட பன்மடங்கு பலம் வாய்ந்தது என்பதை இந்த பட்டியல் எடுத்துரைக்கிறது.
இந்திய ராணுவத்திற்கான வருடாந்திர செலவு கடந்த ஆண்டு 86 பில்லியன் டாலர்கள், அதாவது ரூ.7 லட்சத்தி 32 ஆயிரத்தி 658 கோடி ஆகும். பாகிஸ்தானை விட 9 மடங்கு அதிகமாக இந்தியா செலவு செய்கிறது.
ராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடுகள் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் சீனா, கடந்த 2024ம் ஆண்டில் 314 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கி உள்ளது. இது கடந்த 2023ம் ஆண்டை விட 7 சதவீதம் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (6)
VSMani - ,இந்தியா
29 ஏப்,2025 - 16:13 Report Abuse

0
0
Kumar Kumzi - ,இந்தியா
29 ஏப்,2025 - 16:35Report Abuse

0
0
Rajah - Colombo,இந்தியா
29 ஏப்,2025 - 18:12Report Abuse

0
0
Reply
Murthy - Bangalore,இந்தியா
29 ஏப்,2025 - 15:05 Report Abuse

0
0
M R Radha - Bangalorw,இந்தியா
29 ஏப்,2025 - 18:23Report Abuse

0
0
J.Isaac - bangalore,இந்தியா
29 ஏப்,2025 - 19:13Report Abuse

0
0
Reply
மேலும்
-
பாக்., ஆதரவு கோஷம் எழுப்பியவர் அடித்துக்கொலை: கர்நாடகாவில் 15 பேர் கைது
-
பாக்., பாதுகாப்பு அமைச்சரின் 'எக்ஸ்' கணக்கை முடக்கியது இந்தியா
-
பிரீமியர் லீக் போட்டி: கோல்கட்டா அணி பேட்டிங்
-
பாலக்காடு நகராட்சியில் மோதல்: காங்., மார்க்சிஸ்ட் மீது பா.ஜ., தலைவர் குற்றச்சாட்டு
-
வேலூர் மயானத்தில் உடலை எரிக்காமல் நாடகமாடிய ஊழியர்: உறவினர்கள் வாக்குவாதம்
-
பாகிஸ்தானுக்கு பதிலடி தருவதில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம்: மோடி உறுதி
Advertisement
Advertisement