மனையில் தேங்கும் கழிவுநீரால் வல்லத்தில் நோய் தொற்று பீதி

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வல்லம் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தவிர, வல்லம் -வடகால், ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் உள்ளிட்ட சிப்காட் தொழிற்சாலைகளில் பணிப்புரியும் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் இப்பகுதியில் வாடகைக்கு தங்கி பணிப்புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், வல்லம் கண்ணபிரான் தெருவில் உள்ள வாடகை குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், அப்பகுதி குடியிருப்புகள் மத்தியில் உள்ள காலி மனையில் தேங்கி, கழிவுநீர் குட்டையாக மாறியுள்ளது.

இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கடி தொல்லையில் அப்பகுதியினர் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் தொற்று பரவும் அச்சத்தில் உள்ளனர்.

எனவே, காலிமனையில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றி, அப்பகுதியில் கழிவுநீர் தேங்காத வண்ணம், ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement