எர்ணாகுளம் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

சேலம்: எர்ணாகுளம் - ஹாட்டியா ரயில் தினமும் இரவு, 11:25க்கு புறப்பட்டு கோவை, ஈரோடு, சேலம் வழியே, 3ம் நாள் மதியம், 3:35 மணிக்கு, பீகார் மாநிலம் ஹாட்டியாவை அடைகிறது.

இந்த ரயிலில், வரும், 30 முதல், 3 அடுக்கு ஏசி பெட்டி - 2, கூடுதலாக இணைக்கப்பட உள்ளன. அதன் மறுமார்க்க ரயில் தினமும் மாலை, 5:25க்கு கிளம்பி, 3ம் நாள் காலை, 9:45க்கு எர்ணாகு-ளத்தை அடைகிறது. இந்த ரயிலில், நாளை முதல், 3 அடுக்கு ஏசி பெட்டி - 2 கூடுதலாக இணைக்கப்பட உள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement