எத்தனால் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே எத்தனால் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் அனில்பார்மர், 75; டிரைவர். இவர் ஐதராபாத்தில் இருந்து, டேங்கர் லாரியில், 12 ஆயிரம் லிட்டர் எத்தனால் லோடுடன் திருச்சி நோக்கி நேற்று காலை 6:00 மணிக்கு சென்று கொண்டிருந்தார்.

உளுந்துார்பேட்டை அடுத்த எறஞ்சி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் டிரைவர் காயங்கள் எதுவும் இன்றி தப்பினார். இதையடுத்து, வேப்பூரில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வர வைக்கப்பட்டன. பின்னர் பாதுகாப்புடன் லாரி மீட்க்கப்பட்டடது.

இது குறித்து எடைக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement