டில்லி உஷ்ஷ்ஷ்: கிரிக்கெட் வீரரால் மக்கள் விரக்தி!

10

புதுடில்லி: கிரிக்கெட் போட்டிகளில், 'சிக்சர்' அடிப்பதில் புகழ் பெற்றவர் யூசுப் பதான். இவரை திரிணமுல் காங்கிரசில் சேர வைத்தார், மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி. 2024 லோக்சபா தேர்தலில், முர்ஷிதாபாத் தொகுதியில் போட்டியிட்டு, காங்கிரசின் சீனியர் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை தோற்கடித்து எம்.பி.,யானார்.

வக்ப் சட்டம் தொடர்பாக, யூசுப் பதானின் தொகுதியான முர்ஷிதாபாதில் கலவரம் ஏற்பட்டது. இதில், ஹிந்துக்கள் மீது கடும் தாக்குதல் நடந்தது. ஆனால், எம்.பி.,யோ எதையும் கண்டுகொள்ளவில்லை. கலவர நேரத்தில் ஒரு டீக்கடையில், பதான் டீ குடித்துக் கொண்டிருக்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது; மேலும், பார்லிமென்ட் நடவடிக்கைகளிலும், இவர் அதிகமாக பங்கு கொள்வதில்லை.

'பிரபலமானவர்களை எம்.பி.,யாக்கினால் இப்படித்தான் இருப்பர்' என, திரிணமுல் கட்சிக்குள்ளாகவே அதிருப்தி உள்ளதாம். அதேசமயம், திரிணமுல் காங்கிரசின் எம்.பி.,யாக இருக்கிறார் மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரர், கீர்த்தி ஆசாத். இவர் பதானை போல அலட்சியமாக இல்லாமல், கடுமையாக பணியாற்றி வருகிறார்; பார்லிமென்டிலும் இவரின் பங்கு அதிகம்.

Advertisement