நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, மந்தைவெளிப் பகுதியில் நாய்களுக்கான தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடந்தது.

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கான முகாமை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார். முகாமில், இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது.

நகர மன்ற தலைவர் சுப்புராயலு, கால்நடை மருத்துவர் கந்தசாமி, நகராட்சி கமிஷனர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement