இன்று பாரதிதாசன் பிறந்த நாள் உலக தமிழ்நாளாக கொண்டாட்டம்

பெங்களூரு : கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம், அமெரிக்கா புரட்சி கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம், மும்பை இலெமுரியா அறக்கட்டளை, பெங்களூரு பாரதிதாசன் மறுமலர்ச்சி மன்றம் இணைந்து இன்று பாரதிதாசன் பிறந்த நாளை, உலக தமிழ்நாள் விழாவாக கொண்டாடுகிறது.
சிவாஜி நகர் குயின்ஸ் சாலையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் அக்ரிகல்சுரல் டெக்னாலஜிஸ் முதல் தளத்தில், காலை 10:00 முதல் பகல் 2:00 மணி வரை நடக்கிறது.
தமிழாசிரியை டெய்சி ராணி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறார். ரெபேக்கா ஜான்பாஸ்கோவில் 'பாரதிதாசன் நாட்டிய திருவிழா' மற்றும் 'தமிழரின் தன்மான வாழ்வுக்கு புரட்சிக்கவிஞர் கையில் எடுத்த அறிவாயுதம் தமிழுணர்வே! சமூக சீர்திருத்தமே!' என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடக்கிறது.
'சட்டை போட்ட யானைக்குட்டி' நுால் வெளியீட்டு விழா; பாரதிதாசன் பிறந்த நாள் விழாவில் அழகின் சிரிப்பு என்ற தலைப்பில், இலெமுரியா அறக்கட்டளை நிறுவன தலைவர் குமணராசன் பேசுகிறார். க.த.ப.ச., சங்க துணைத்தலைவர் செந்தில்நாதன் நன்றி கூறுகிறார்.
மேலும்
-
டில்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்; அடையாளம் கண்டது உளவுத்துறை!
-
விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு
-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை