கால்நடை மருத்துவர் தின விழா

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம், தனியார் ஓட்டலில், உலக கால்நடை மருத்துவர்கள் தின விழா நடந்தது.
மாவட்ட கால்நடை மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கால்நடைத்துறை முன்னாள் மண்டல துணை இயக்குனர் துரைராஜன் தலைமை தாங்கினார்.
கால்நடை மருத்துவர்கள் ரத்தினவேலு, நல்லதம்பி, ராஜன், செல்வம் முன்னிலை வகித்தனர். திருக்கோவிலுார் கால்நடை மருத்துவமனை முதன்மை மருத்துவர் சுகுமார் வரவேற்றார்.
உதவி இயக்குனர் பால்சுப்ரமணி, முதன்மை மருத்துவர் கந்தசாமி, கால்நடை மருத்துவர்கள் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், சின்னசேலம் ஆவின் உதவி பொது மேலாளர் வெங்கடேசன் வாழ்த்தி பேசினார்.
கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் ஒற்றுமை உணர்வுடன் கால்நடை பராமரிப்பு பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். சங்க கூட்டத்தை தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க கோட்ட செயலாளர் சுகம் நன்றி கூறினார்.
மேலும்
-
டில்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்; அடையாளம் கண்டது உளவுத்துறை!
-
விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு
-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை