விவசாயி பல் உடைப்பு: வாலிபர் கைது

பண்ருட்டி : விவசாயியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த அவியனுாரைச் சேர்ந்தவர் பழனிவேல்,52; இவரது மகன் தமிழரசன்,27; நேற்று தனது வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற வேன் திடீரென கவிழ்ந்தது. ஜே.சி.பி., மூலமாக மூலம் வேனை அகற்றும் பணி நடந்தது.

அப்போது நெல் பயிர் சேதமாவதாக பழனிவேல் திட்டிக் கொண்டிருந்தார். பக்கத்து நிலத்தில் இருந்த நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வைகுந்தவாசன்,27; என்பவர், பழனிவேல் தன்னை திட்டுவதாக நினைத்து அவரை தாக்கினார். இதில், பழனிவேலின் பல் உடைந்தது.

இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து வைகுந்தவாசனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement