ரயில் மோதி வியாபாரி பலி

கடலுார்: வடலுார் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது, பாசஞ்சர் ரயிலில் அடிபட்டு அரியலுார் ஆடு வியாபாரி இறந்தார்.

அரியலுார் மாவட்டம், ஆத்துக்குறிச்சி அடுத்த விழுது உடையான் பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார்,40; ஆடு வியாபாரி. நேற்று ஊரில் இருந்து ஆடுகளை வேனில் ஏற்றி வந்து வடலுார் சந்தையில் விற்பனை செய்தார். பின், பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

இயற்கை உபாதை கழிக்க வடலுார் அடுத்த குறவன்குப்பம் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, கடலுாரில் இருந்து திருச்சி நோக்கி வந்த பாசஞ்சர் ரயில், சசிக்குமார் மீது மோதியது.

இதில், துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவலறிந்த கடலுார் முதுநகர் ரயில்வே இருப்புப் பாதை சப் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement