கோவில் இடம் ஆக்கிரமிப்பு கிராம மக்கள் எதிர்ப்பு

சேத்தியாத்தோப்பு : கோவில் இடத்தை ஆக்கிரமித்து தனியார் பள்ளி நிர்வாகம் மதில் சுவர் அமைக்கும் பணியை கிராம மக்கள் தடுத்ததால் பரபரப்பு நிலவியது.

சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்துார் கிராமத்தில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மார்க்க சகாய ஈஸ்வரன் சுவாமி கோவில் உள்ளது. அதே பகுதியில் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனியார் பள்ளி நிர்வாகம் ஆக்கிரமித்து மதில் சுவர் கட்டுமான பணிக்கு பில்லர் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதனையறிந்த கிராம மக்கள் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்று கட்டுமான பணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. அறநிலையத்துறை அதிகாரிகள் சுபாஷினி, ராஜாராமன், வருவாய் ஆய்வாளர் பிரியதர்ஷினி, வி.ஏ.ஓ., வாஞ்சிநாதன் ஆகியோர் கோவில் இடத்தினை ஆய்வு செய்து, மதில் சுவர் அமைக்கும் பணியை தடுத்து, பள்ளி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக ஒரத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement