பாதாளசாக்கடை மேன்ஹோல் மூடி சேதத்தால் நீளும் கம்பி

விருதுநகர் : விருதுநகரில் பாதாளசாக்கடை மேன்ஹோல் மூடி சேதத்தால் நீளும் கம்பியால் விபத்து அச்சம் உள்ளது.
விருதுநகரில் ஆங்காங்கே பாதாளசாக்கடை மேன்ஹோல் மூடிகள் சேதம் அடைந்துள்ளன. சில இடங்களில் பள்ளம் போல் குழிவு ஏற்பட்டும், சில இடங்களில் அவற்றில் டயர்கள், கட்டுமான கழிவுகள் போட்டு அடைத்தும் வைத்துள்ளனர். இந்நிலையில் ரிங்க் ரோட்டில் உள்ள பாதாளசாக்கடை மேன்ஹோல் சேதம் அடைந்து தற்போது மோசமான நிலையில் உள்ளது.
இதை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது அரசு மருத்துவமனைக்கு செல்லும் ரோடுக்கான இணைப்பு ரோடு. இந்த வழியாக அவ்வப்போது கனரக வாகனங்கள் மில்களுக்கு சென்று வருகின்றன. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் வாகன நெரிசல் எப்போதும் இருக்கும். இந்நிலையில் மேன்ஹோல் மூடி விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் மக்கள் கடும் சிரமத்துடன் அப்பகுதியை கடக்க வேண்டி உள்ளது. இரவு நேரங்களில் தவறி விழுந்து விபத்தை சந்திப்போரும் அதிகம் உள்ளனர். எனவே இதை சேதம் அடைந்து கம்பி நீண்டுள்ள பாதாளசாக்கடை மூடியை சரி செய்ய வேண்டும்.
மேலும்
-
கஞ்சா வழக்கில் மலையாள சினிமா இயக்குநர்கள் கைது
-
கனடாவில் பயங்கரவாத தாக்குதல்; இசை விழாவில் அதிவேக கார் புகுந்ததில் பலர் பலி
-
டில்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்; அடையாளம் கண்டது உளவுத்துறை!
-
விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு
-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை