துணை முதல்வர் உதயநிதி பெயரை சொல்லி கோவையில் தி.மு.க.,வினர் வசூல் வேட்டை

கோவை: கோவையில் நடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு, தமிழக துணை முதல்வர் உதயநிதி வருகிறார் என கூறி, அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், லட்சக்கணக்கில் தி.மு.க.,வினர் வசூல் வேட்டை நடத்தியிருக்கும் தகவல், வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில், செட்டிபாளையம் அருகே இன்று (ஏப்., 27) ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. அமைச்சர் செந்தில்பாலாஜி, துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், தமிழக துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவுக்கு உதயநிதி வருகிறார் என்று பிரசாரம் செய்து, நகரில் பல்வேறு இடங்களில், தி.மு.க.,வினர் வசூல் வேட்டை நடத்தியுள்ளனர். கல்குவாரிகள், மணல் வியாபாரிகள், தனியார் கல்லுாரிகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், டிபார்மென்ட் ஸ்டோர்கள், கடைகள், ஹோட்டல்கள், மெஸ்கள், லாட்ஜ்கள் என ஒவ்வொரு இடமாகச் சென்று, உதயநிதி பெயரை கூறி, லட்சக்கணக்கில் வசூல் செய்யப்பட்டிருக்கிறது.
இதேபோல், கனிம வளத்துறையினர், வட்டார போக்குவரத்து துறையினர், பத்திரப்பதிவு துறையினர், ஒன்றிய அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு லட்சம் ரூபாயில் இருந்து பல லட்சம் வரை கட்டாயப்படுத்தி, வாங்கப்பட்டிருக்கிறது. ஒப்பந்ததாரர்களிடம் நேரடியாக வசூலிக்காமல், அரசு அதிகாரிகள் மூலம் வசூலித்து பெறப்பட்டிருக்கிறது.
இச்சூழலில், கடைக்காரர்களுக்கு அழுத்தம் கொடுத்து பணம் வசூலித்தது தொடர்பான ஆடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தொழில்துறையினரிடம் பணம் கேட்டு அழுத்தம் கொடுத்தது, ஆளுங்கட்சி மீது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.











மேலும்
-
'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு அனுமதியில்லை: தமிழக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
கூப்பிட ஆள் இல்லாததால் தனியாக புலம்பும் விஜய்; அமைச்சர் கோவி. செழியன் விமர்சனம்
-
கஞ்சா வழக்கில் மலையாள சினிமா இயக்குநர்கள் கைது
-
கனடாவில் பயங்கரவாத தாக்குதல்; இசை விழாவில் அதிவேக கார் புகுந்ததில் பலர் பலி
-
டில்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்; அடையாளம் கண்டது உளவுத்துறை!
-
விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு