நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஏப்ரல் 26) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய போக்சோ
தொழிலதிபர் மீது பாய்ந்த வழக்கு
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே வீரக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அருள்சூசை, 50; அருள்மேக்ஸ் குரூப்ஸ் நிர்வாக இயக்குநர். தொழிலதிபரான இவர், துபாய் மற்றும் நம் நாட்டில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
தாய் இறந்து, தந்தை குடிக்கு அடிமையான நிலையில், அத்தை பராமரிப்பில் இருந்த 17 வயது சிறுமியிடம், ஆசைவார்த்தைகளை கூறி பழகிய அருள்சூசை, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் கர்ப்பமடைந்த சிறுமிக்கு, இரண்டு மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளியில் விபரம் அறிந்து, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் வாயிலாக புகார் கிடைத்தும், பட்டுக்கோட்டை மகளிர் போலீசார் அப்போது வழக்கு பதிவு செய்யவில்லை. அருள்சூசை, சிறுமியின் குடும்பத்தினரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த புகார் தஞ்சாவூர் டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி., கவனத்திற்கு சென்றதையடுத்து, பட்டுக்கோட்டை மகளிர் போலீசார், நேற்று முன்தினம் விசாரித்தனர். அருள்சூசை மீது போக்சோ உள்ளிட்ட சில பிரிவுகளில் வழக்கு பதிந்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர். ஏற்கனவே, அருள்சூசை பாலியல் தொல்லை அளித்ததாக, பெண் கொடுத்த புகார் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
14 வயது சிறுமி கர்ப்பம்
தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கவியரசன், 24; ஐ.டி.ஐ., முடித்துவிட்டு வீட்டில் உள்ளார். அதே பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி, கவியரசன் பழகி வந்துள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி, சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி, தற்போது நான்கு மாத கர்ப்பமாக உள்ளார். சிறுமியின் பெற்றோர், தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ், கவியரசனை நேற்று கைது செய்தனர்.
உணவு டெலிவரி ஊழியருக்கு கம்பி
மதுரை, ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் ஆன்டனி டேவிட்ராஜ், 28; பிரபல உணவு டெலிவரி நிறுவன ஊழியர். இவர், 10 நாட்களுக்கு முன் ஆண்டாள்புரத்தில் ஒரு வீட்டிற்கு உணவு டெலிவரி செய்ய சென்றார். அங்கு, 10 வயது சிறுமியிடம் உணவு பார்சல் கொடுத்த போது சில்மிஷத்தில் ஈடுபட்டு தப்பினார். வீட்டில் உள்ளவர்களிடம் சிறுமி தெரிவித்தார்.
கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைக்க திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம், மீண்டும் அதே பகுதிக்கு உணவு கொடுக்க வந்த இளைஞர் குறித்து சிறுமி தகவல் தெரிவித்தார். அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தெற்கு மகளிர் போலீசார், போக்சோ வழக்கில் கைது செய்தனர்.






மேலும்
-
சென்னை, குமரி ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் அனுமதியை ரத்து செய்க; ராமதாஸ் வலியுறுத்தல்
-
பதிலடி கொடுக்குமா மும்பை? லக்னோவுக்கு எதிராக பேட்டிங்
-
'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு அனுமதியில்லை: தமிழக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
கூப்பிட ஆள் இல்லாததால் தனியாக புலம்பும் விஜய்; அமைச்சர் கோவி. செழியன் விமர்சனம்
-
கஞ்சா வழக்கில் மலையாள சினிமா இயக்குநர்கள் கைது
-
கனடாவில் பயங்கரவாத தாக்குதல்; இசை விழாவில் அதிவேக கார் புகுந்ததில் பலர் பலி