ஹாக்கி: இந்தியா மீண்டும் தோல்வி

பெர்த்: இரண்டாவது ஹாக்கி போட்டியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி மீண்டும் தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதற்கட்டமாக ஆஸ்திரேலியா 'ஏ' அணியுடன் மூன்று போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
பெர்த்தில் 2வது போட்டி நடந்தது. இதில் ஏமாற்றிய இந்திய அணி 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணிக்கு ஜோதி சிங் (13வது நிமிடம்), சுனேலிதா (59வது) தலா ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தனர். ஆஸ்திரேலியா 'ஏ' அணி சார்பில் எவி ஸ்டான்ஸ்பி (17வது நிமிடம்), டேல் டோல்கென்ஸ் (48வது), ஜேமி-லீ சுர்ஹா (52வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஸ்கள் எங்கு வருகிறது என்பதை கண்டறிய கே.எஸ்.ஆர்.டி.சி., வசதி
-
கடலோர பகுதியில் பாதுகாப்பு
-
வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால் 16 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு
-
ரிக்கி ராய் கார் மீது துப்பாக்கி சூடு விசாரணைக்கு அனுராதா ஆஜர்
-
கபடி போட்டியில் கேலரி சரிந்து பார்வையாளர் பரிதாப பலி
-
பேராசிரியரை தாக்கிய மூன்று பேர் கைது
Advertisement
Advertisement