பிரீமியர் லீக்: 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி

ஜெய்ப்பூர்: பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் வைபவ் சூரியவன்சியின் அதி வேக சதத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி , குஜராத் அணியை வீழ்த்திவெற்றி பெற்றது.
பிரீமியர் லீக் டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய 47-வது லீக் போட்டி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் அணியும், குஜராத் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்சன், கேப்டன் கில், இருவரும் அதிரடியாக ஆடத் துவங்கினர். நிதானமாக விளையாடிய சாய் சுதர்சன் 30 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்தபோது, தீக்ஷனா பந்தில் ஆட்டமிழந்தார்.
சுப்மன் கில், பட்லர் அரைசதம்
அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த கேப்டன் சுப்மன் கில் 31 பந்துகளில் அரை சதம் விளாசினார். இறுதியில் 50 பந்துகளை எதிர்கொண்டு 84 ரன்கள் எடுத்து தீக்ஷனா பந்தில் ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்ஸர்களும் 5 பவுண்டரிகளும் அடங்கும்.
அடுத்து வந்த பட்லர் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 50 ரன்களில் 4 சிக்ஸர்களும் 3 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில்,குஜராத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் தீக்ஷனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 210 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய ராஜஸ்தான் அணியில் யாஷிவ் ஜெயஸ்வாலும், வைபவ் சூரியவன்சியும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். யாஷிவ் ஜெயஸ்வால் 31 பந்துகளில் அரைசதம் அடித்த யாஷிவ் ஜெயஸ்வால் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இப்போட்டியில் 14 வயது வைபவ் சூரியவன்சி 35 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். இதில் 11 சிக்சர்கள், 7 பவுண்ட்ரிகள் அடங்கும்.. ஆட்டத்தின் 11.5 வது ஓவரில் சூரிய வன்சி 101 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது ராஜஸ்தான் அணி 12 ஓவர்களில் ஒரு விக்கெட்,இழப்பிற்கு 170 எடுத்தது.
தொடர்ந்து நிதீஷ் ராணா 4 ரன்களில் அவுட்டானர். இறுதியில் 15.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணியில்பிரசித் கிருஷ்ணா, ரஷீத்கான் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
மேலும்
-
ரூ.62.52 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்
-
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
-
ஊருக்குள் தேர் வந்து செல்ல நடவடிக்கை கரூர் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
-
தர்பூசணியில் கலப்படம் செய்வதாக வதந்தி நம்ப வேண்டாம்; கலெக்டர் வேண்டுகோள்
-
அரவக்குறிச்சியில் சாலை அமைக்கும் பணி தீவிரம்
-
கரூர் மாவட்ட தலைமை நீதிமன்ற நீதிபதி இடமாற்றம்