ஊருக்குள் தேர் வந்து செல்ல நடவடிக்கை கரூர் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு


கரூர்:
சேனப்பாடி, அரவாயி அம்மன் கோவில் தேர், எங்கள் ஊருக்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நெரூர் கிராம மக்கள், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது:

கரூர் அருகில், நெரூர் வடபாகம் சேனப்பாடி அரவாயி அம்மன் கோவில் சுற்றியுள்ள பகுதியில், 180க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வைகாசி மாதத்தில் திருவிழா, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. இந்தாண்டு திருவிழா, மே 21 முதல், 23 வரை நடக்கிறது. வழக்கமாக தேர் திருவிழாவின்போது, நெரூர் மாரியம்மன் கோவில் அருகில் தேர் வந்து நிற்கும். அப்போது, பொதுமக்கள் வழிபாடு நடத்துவர். சில திருவிழாகளாக, எங்கள் ஊருக்கு தேர் வருவதில்லை. இதனை ஒரு பிரிவினர் வரவிடாமல் தடுத்து வருகின்றனர். எங்கள் ஊருக்கு தேர் வந்து செல்ல, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement