ரூ.62.52 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்
கரூர்:
சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய், எள் ஆகியவை சேர்ந்து, 62.52 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
கரூர் மாவட்டம் நொய்யல் அருகில், சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. 8,023 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 31.89 ரூபாய், அதிகபட்சமாக, 60.65, சராசரியாக, 52.25க்கு ஏலம் போனது. மொத்தம், 2,613 கிலோ தேங்காய்கள், 1 லட்சத்து, 11 ஆயிரத்து, 787 ரூபாய்க்கு விற்பனையானது.
கொப்பரை தேங்காய் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக 175.09, அதிகபட்சமாக, 180.19, சராசரியாக, 176.69, இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 120.19, அதிகபட்சமாக, 173.99, சராசரியாக, 143.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 9,277 கிலோ கொப்பரை தேங்காய், 13 லட்சத்து, 74 ஆயிரத்து, 709 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
எள் கருப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 110, அதிகபட்சமாக, 171, சராசரியாக, 142.59, சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 105.99, அதிகபட்சமாக, 137, சராசரியாக, 127 ரூபாய்க்கு ஏலம் போனது. வெள்ளை ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 102.99, அதிகபட்சமாக, 119.02, சராசரியாக, 116.16 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 35 ஆயிரத்து, 475 கிலோ எடையுள்ள எள், 47 லட்சத்து, 65 ஆயிரத்து, 668 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய், எள் ஆகியவை சேர்ந்து, 62 லட்சத்து, 52 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.