கரூர் மாவட்ட தலைமை நீதிமன்ற நீதிபதி இடமாற்றம்

கரூர்:
கரூர் மாவட்ட தலைமை நீதிபதி, சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் நேற்று, 52 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், கரூர் மாவட்ட தலைமை நீதிபதி சண்முக சுந்தரம், சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக, சென்னை பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகள் விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன், கரூர் மாவட்ட தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், கரூர் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எழில், ஈரோடு மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement