காஷ்மீரில் நடமாடிய அந்த 4 பேர்: சல்லடை போட்டு தேடும் பாதுகாப்பு படை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சந்தேக நபர்கள் 4 பேரின் நடமாட்டம் இருப்பதை உறுதி செய்த ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சில நாட்கள் முன்பு குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதி ஒருவரின் மறைவிடத்தை கண்டுபிடித்தனர். அங்கிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகளை கைப்பற்றினர்.
அதன் பின்னர், வடக்கு காஷ்மீரில் முஷ்டகாபாத் பகுதியில் உள்ள செடோரி நாளா வனப்பகுதியில் அடையாளம் தெரியாதவர்களின் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அங்கே சோதனையிட்ட பாதுகாப்புப் படையினர் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
இந் நிலையில் ரஜௌரி மாவட்டத்தில் சுந்தர்பானி பகுதியில் 4 சந்தேக நபர்கள் நடமாடுவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு முகாமிட்டுள்ள பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த பகுதியை சுற்றி வைத்துள்ள அவர்கள், சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும்
-
ரூ.62.52 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்
-
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
-
ஊருக்குள் தேர் வந்து செல்ல நடவடிக்கை கரூர் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
-
தர்பூசணியில் கலப்படம் செய்வதாக வதந்தி நம்ப வேண்டாம்; கலெக்டர் வேண்டுகோள்
-
அரவக்குறிச்சியில் சாலை அமைக்கும் பணி தீவிரம்
-
கரூர் மாவட்ட தலைமை நீதிமன்ற நீதிபதி இடமாற்றம்