மரக்கடை உரிமையாளர் வீட்டில் 25 பவுன் திருட்டு
மேட்டுப்பாளையம், ; காரமடை அருகே வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 25 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர். கவரிங் நகைகளை தவிர்த்து தங்க நகைகளை மட்டும் எடுத்து சென்றனர்.
கோவை மாவட்டம் காரமடை அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் இஸ்மாயில், 63. மரக்கடை உரிமையாளர். இவர் தனது மனைவி மற்றும் மூத்த மகன் ஆசிக், 34, இளைய மகன் ஆபித், 30 ஆகியோருடன் வசித்து வருகிறார். மகன்கள் இருவருக்கும் திருமணம் ஆகி அவர்களது குடும்பத்தினரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இதனிடையே நேற்று முன் தினம் இஸ்மாயில் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவையில் ஒரு திருமண நிகழ்வுக்கு சென்றிருந்தனர்.
பின் இரவு அங்கே தங்கிவிட்டு, நேற்று மதியம் வீட்டிற்கு வந்தனர். அப்போது, வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின் வீட்டின் மாடியில் உள்ள 3 படுக்கை அறைகளில் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டு 25 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது, ரூ.1,500 பணத்தையும் காணவில்லை. இதில் திருட வந்த நபர்கள் கவரிங் நகைகளை தனியாக பிரித்து, தங்க நகைகளை மட்டும் கொள்ளையடித்து சென்றனர்.
இதையடுத்து, காரமடை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது.
இதே போல் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஒரு வீட்டிலும் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.----
மேலும்
-
கனடா தேர்தலில் வெற்றி: மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
-
நாட்டின் பாதுகாப்புக்காக ஸ்பைவேரை பயன்படுத்துவதில் தவறில்லை: சுப்ரீம் கோர்ட்
-
பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்
-
லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு: வணிக வரித்துறை அதிகாரி, மனைவிக்கு 4 ஆண்டு சிறை
-
புனே விமான நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை; கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை தீவிரம்
-
ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் இந்தியா 5வது இடம்; இதோ பட்டியல்!