ஈரோட்டில் சிக்னலில் பசுமை பந்தல் அமைப்பு


ஈரோடு:

ஈரோடு மாநகரில் நாளுக்கு நாள் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மாநகரில் போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் பசுமை பந்தல் அமைக்க கோரிக்கை முன் வைக்கப்பட்டது.


இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம், பசுமை பந்தல் அமைக்க சார்பில் தனியார் அமைப்புகளை கேட்டு கொண்டது. இதன்படி ஈரோடு-பெருந்துறை சாலை கலெக்டர் அலுவலக சிக்னலில் பசுமை பந்தல் இருபுறங்களிலும், 100 அடி நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளை சற்று நிம்மதி பெருமூச்சு விட செய்துள்ளது. இதேபோல் ப.செ.பார்க், காளை மாட்டு சிலை சிக்னல் பகுதியிலும் பசுமை பந்தல் அமைக்க வாகன ஓட்டிகள் காத்திருக்கின்றனர்.

Advertisement