ஆசிரியருக்கு பாராட்டு விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆப்பிராய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை உமா பணி நிறைவு பெற்றதால் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பாராட்டு விழா நடந்தது. தமிழக ஆசிரியர் கூட்டணி ஆர். எஸ்.மங்கலம் வட்டார தலைவர் தமிழரசி தலைமை வகித்தார். வட்டார செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.

ஓய்வு பெற்ற ஆசிரியர் உமா குறித்து ஆசிரியர்கள் புகழாரம் சூட்டினர். ஐபெட்டோ அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வம், வட்டார பொருளாளர் சிலம்பரசன், ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன், ராமநாதன், சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement