மின்னல் தாக்கி விபத்து ஏற்படுவதை தவிர்க்க பட்டாசு ஆலை அறைகளில் இடிதாங்கிகள் தேவை

விருதுநகர் மாவட்டத்தில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செய்யப்பட்டு வருகின்றது. டி.ஆர்.ஓ. லைசென்ஸ், ஆர்.டி.ஓ. லைசென்ஸ், நாக்பூர் லைசென்ஸ், பெற்று பல பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமானோர் பணி புரிந்து வருகின்றனர்.

பட்டாசு ஆலைகளில் சோல்சா , பேன்சி ரக பட்டாசுகள் தயாரிப்பதற்கு மருந்து கலக்கும் அறைகள் பட்டாசு தயாரிக்கும் பணிக்கு தனி தனி அறைகள் பட்டாசு ஆலையிலும் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஊராட்சி பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியிலேயே பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ஊராட்சி, நகர் பகுதியில் இருந்து பட்டாசு ஆலைக்கு தொழிலாளர்கள் வேன் மற்றும் பஸ்களில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.,பொதுவாக பட்டாசுகள் தயாரிக்கும் அறைகளில் மின்னல் தாக்காத வகையில் இடிதாங்கிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் தற்போது பெரும்பாலான பட்டாசு ஆலைகளில் ஸ்டாக் அறைகளில் மட்டுமே இடிதாங்கி அமைக்கப்பட்டு உள்ளது .ஒவ்வொரு அறையிலும் இடிதாங்கி அமைத்திருந்தால் மட்டுமே காட்டுப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் மீது இடி மின்னல் தாக்கும் போது விபத்து ஏற்படுவது குறையும்.

பட்டாசு ஆலைக்கு விடுமுறை விட்ட நாட்களில் இடி மின்னல் தாக்கும் பொழுது பட்டாசு ஆலையின் அறை மற்றும்பட்டாசுகள் உள்ளிட்ட பொருட்கள் மட்டுமே சேதம் அடைகின்றன. ஆனால் பணிகள் நடைபெறும் காலத்தில் இது போன்ற இடி மின்னல் தாக்குதல் ஏற்பட்டால் விலை மதிப்பு இல்லாத தொழிலாளர்களின் உயிர் பலியாகும் அபாயம் உள்ளது.

பேன்சிரக பட்டாசுகளில்செலுத்தப்படும் மணி மருந்து மீது லேசாக நீர் துளி பட்டாலே நீர்த்து வெடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் பட்டாசுகள் ஸ்டாக் வைக்கப்பட்டிருக்கும் அறைகளில் இடிதாங்கிகள் இல்லாத நிலையில் அந்த அறைகள் மீது மின்னல் தாக்கும் போது மின்னூட்டம் ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்படும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது.

பெரும்பாலான வெடிவிபத்து சம்பவங்கள் காலை ,மாலை நேரங்களில் தொழிலாளர்கள் பணியில் இல்லாத நேரத்தில் நடைபெறுவதால் உயிர் பலி இதுவரை ஏற்படவில்லை.

இனியும் ஏற்படாமல் தடுக்க பட்டாசு ஸ்டாக் அறைகளிலும் மணி மருந்து கலக்கும் அறைகளிலும் இடிதாங்கிகளை பொறுத்திட ஆலை நிர்வாகத்தினர் முன் வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement