இடி விழுந்து மாடு பலி

முதுகுளத்துார்:முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது இடியுடன் மழை பெய்கிறது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. முதுகுளத்துார் அருகே கிழவனேரியை சேர்ந்த மீனா மாடுகள் வளர்க்கிறார்.

விவசாய நிலத்தில் மேய்ச்சலில் ஈடுபட்ட மாடு மீது இடி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தது. இதனால் விவசாயி மீனாவின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.எனவே வருவாய்த்துறையினர் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Advertisement