பந்தல்கரடு அடிவாரத்தில் எரிந்து கிடந்த மொபட்


பவானி:

அம்மாபேட்டை, ஊமாரெட்டியூர் அருகேயுள்ள பந்தல் கரடு மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாகம். இங்கு கொடம்பக்காடு செல்லும் சாலையில், முற்றிலும் எரிந்த நிலையில் மொபட் கிடந்தது.

இதைப்பார்த்த மக்கள் கொடுத்த தகவலின்படி அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீசார் சென்றனர். முற்றிலும் எரிந்த மொபட் யாருடையது? எதற்காக தீ வைக்கப்பட்டது? அல்லது ஓடும் போதே தீப்பிடித்து எரிந்ததா? யாருக்கு சொந்தமானது? என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement