குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளம் சமாளிக்கும் பேரூராட்சி அதிகாரிகள்

திருப்புவனம்: திருப்புவனத்தில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும்பணி முழுமையடையாத நிலையில் ஒப்பந்தகாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கொடுத்த புகாருக்கு அதிகாரிகள் சமாளித்து பதில் வழங்கியுள்ளனர்.

திருப்புவனத்தில் 16 கோடி ரூபாய் செலவில் அம்ரூத் 2,0 திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும்பணிகள் நடந்து வருகிறது. குழாய் பதித்த பின் அந்த இடங்களை பழைய முறைப்படி சமதளமாக்க வேண்டும், குழாய் பதித்த பள்ளங்கள் ஏற்கனவே பேவர் பிளாக், சிமென்ட் சாலை, தார்ச்சாலை என இருந்ததோ அதே முறைப்படி அமைக்க வேண்டும்.

ஆனால் ஒப்பந்தகாரர்கள் பல இடங்களில் பணிகளை முடிக்கவே இல்லை. குழாய் பதிப்பதற்காக பள்ளங்கள் தோண்டியதுடன் சரிவர மூடாமல் அப்படியே விட்டு விட்டனர். இதுகுறித்து முத்துராஜா என்பவர் முதலமைச்சரின் தனிப்பிரிவு, பேரூராட்சி அலுவலகத்தில் புகார் கொடுத்ததை அடுத்து அதிகாரிகள் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும் பணிக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனவே விரைவில் அனைத்து இடங்களிலும் பணிகள் நிறைவடையும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement