ஓடும் ரயிலில் நகை பறித்தவர் சிக்கினார்
சென்னை, பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த விரைவு ரயிலில், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி, 70, என்பவர் பயணம் செய்தார்.
ரயில் பேசின்பாலம் - சென்னை சென்ட்ரல் இடையே மெதுவாக வந்தபோது, விஜயலட்சுமி அணிந்திருந்த 6 கிராம் தங்க செயினை, வாலிபர் ஒருவர் பறித்து தப்பினார்.
அதேபோல், பாலக்காடு விரைவு ரயிலில், ஒரு பெண்ணிடம் அதே வாலிபர் நகை பறிப்பில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இது குறித்து, சென்ட்ரல் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இதில், வில்லிவாக்கம், லட்சுமிபுரத்தைச் சேர்ந்த குமரேசன், 30, என்பவர், செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம், செயின்கள், கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
லாரியில் கார் மோதி கோர விபத்து ஓசூரை சேர்ந்தவர் உட்பட 5 பேர் பலி
-
ஈ.வெ.ரா., பற்றி அவதுாறு பேச்சு சீமான் மீது வழக்கு பதிய உத்தரவு
-
கும்பகோணத்தில் கலைஞர் பல்கலை துவக்க மசோதா தாக்கல்
-
பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த 22 பேர் கைது
-
மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக பதவியேற்பு
Advertisement
Advertisement