ஆட்டோ திருட்டு; வாலிபர் கைது

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் தைலாகுளத்தை சேர்ந்தவர் காளிராஜன் 34, ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷன் முன்பு தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு இரவு கொல்லம் ரயிலில் வரும் பயணிகளை சவாரி ஏற்றுவதற்காக அங்குள்ள பெஞ்சில் படுத்திருந்தார்.

எழுந்த போது ஆட்டோவை காணவில்லை. அந்த ஆட்டோ மடவார் வளாகம் ரோட்டில் கவிழ்ந்து கிடந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் விசாரணையில், ராஜபாளையத்தை சேர்ந்த புதிய ராஜ் 19, என்பவர் ஆட்டோவை திருடி சென்றது கண்டறியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

Advertisement