பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மோசமான நாடு; ஐ.நா.,வில் பாகிஸ்தானுக்கு இந்தியா 'குட்டு'

நியூயார்க்: "உலகளாவிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு மோசமான நாடு'' என ஐ.நா.,வில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் நாடே கடும் கோபத்தில் இருக்கிறது. இதற்கிடையே, பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பல தசாப்தங்களாக பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளித்து ஆதரவு அளிப்பதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இது குறித்து ஐ.நா.,வில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக விமர்சித்துள்ளது.
இது குறித்து, ஐ.நா.வில் உள்ள இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜ்னா படேல் கூறியதாவது: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளித்து ஆதரித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலம் யாரையும் ஆச்சரியப்படுத்தவில்லை. உலகளாவிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு மோசமான நாடு என்பதை அம்பலப்படுத்தி உள்ளது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு, பயிற்சி மற்றும் நிதியுதவி அளித்ததை ஒப்புக்கொண்டதை உலகம் முழுவதும் மக்கள் கேட்டுள்ளனர். 2008ல் நடந்த பயங்கரமான 26/11 மும்பை தாக்குதலுக்குப் பிறகு, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
பயங்கரவாத தாக்குதலை அடுத்து, உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் மற்றும் அரசாங்கங்கள் அளித்த ஆதரவையும், ஒற்றுமையையும் பாராட்டுகிறோம். இது பயங்கரவாதத்தை பொறுத்துக் கொள்ள முடியாது என்பதற்கு சான்றாகும். பயங்கரவாதம் எல்லா வகையிலும் கண்டிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.



மேலும்
-
தி.மு.க., பீர் விருந்து; இ.பி.எஸ்., விமர்சனம்
-
முஜிபுர் ரஹ்மான் படம் கொண்ட ரூபாய் நோட்டுகள் நிறுத்தம்; நெருக்கடியில் வங்கதேசம்!
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை
-
கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!