குறைகேட்பு கூட்டம் 432 மனுக்கள் குவிந்தன

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 432 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
அதில் வருவாய், வேளாண், ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் குடிநீர் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, உதவித் தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 419 மனுக்கள், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 13 மனுக்கள் என மொத்தம் 432 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் தனி தாசில்தார் சுமதி உட்பட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
தி.மு.க., பீர் விருந்து; இ.பி.எஸ்., விமர்சனம்
-
முஜிபுர் ரஹ்மான் படம் கொண்ட ரூபாய் நோட்டுகள் நிறுத்தம்; நெருக்கடியில் வங்கதேசம்!
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை
-
கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!