பனை மரத்தில் கார் மோதி 3 பேர் காயம்

கமுதி: கமுதி பசும்பொன் அருகே மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள பனைமரத்தின் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் பெண் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.

பார்த்திபனுாரை சேர்ந்த மாரிச்செல்வம் பத்திரிக்கை வழங்குவதற்கு கமுதி அருகே தோப்படைப்பட்டிக்கு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கமுதி பசும்பொன் அருகே மின்வாரிய அலுவலகம் எதிரே ரோட்டோரத்தில் இருந்த பனை மரத்தின் மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்திற்குள்ளானது.

இதில் டிரைவர் சதீஷ்குமார் 25, மாரிச்செல்வம் 44, அவரது மனைவி மாரிச்செல்வி 35, பலத்த காயமடைந்தனர். கமுதி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கமுதி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement