கிராம தலைவர் குத்திக்கொலை ஆர்.எஸ்.மங்கலத்தில் பரபரப்பு

ஆர்.எஸ்.மங்கலம் : ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம், ஆட்டாங்குடி அருகே குயவனேந்தலைச் சேர்ந்தவர் காசிலிங்கம்.
கிராம தலைவரான இவர் நேற்று முன்தினம் மாலை ஊரில் நடந்த கிராம கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மக்கள் அவரது வீட்டிற்கு சென்று விசாரித்தபோது, காலை டூ - வீலரில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என, தெரியவந்தது.
அவரை தேடியபோது, ஊரிலிருந்து 2 கி.மீ., துாரத்தில் உள்ள சீமைக்கருவேல காட்டுப்பகுதியில் காசிலிங்கத்தின் டூ - வீலர் கேட்பாரற்று நின்றிருந்தது. காட்டுப்பகுதிக்குள் கழுத்து, மார்பில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு, காசிலிங்கம் இறந்து கிடந்தார். திருப்பாலைக்குடி போலீசார், அவரது உடலை மீட்டனர்.
காசிலிங்கத்தின் நெருங்கிய உறவினர் குடும்பத்தினருடன், சொத்து பிரச்னை தொடர்பாக பல ஆண்டுகளாக விரோதம் இருந்து வருகிறது. இந்த முன் விரோதத்தில் கொலை நடந்ததா அல்லது வேறு காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை
-
கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!
-
போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த சிறுத்தை; நீலகிரியில் போலீசார் அதிர்ச்சி!
-
குஜராத்தில் சட்டவிரோதமாக இருந்த 6500 பேர்; ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு