தடைக்கால நிவாரணத்தொகை 39,787 பேருக்கு பரிந்துரை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் பிடி தடைக்காலத்திற்காக அரசால் வழங்கப்படும் நிவாரணத்தொகை வழங்க 39 ஆயிரத்து 787 பேருக்கு மீன் வளத்துறையினரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் ஏப்., 15 முதல் ஜூன் 14 வரை இரண்டு மாத காலம் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்படும்.தடைக்காலத்தின் போது விசைப்படகுகளில் உள்ள பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள். தடைக்காலத்தில் மீனவர்கள் மீன் பிடி தொழில் இல்லாமல் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு நிவாரணத் தொகை அரசால் வழங்கப்பட்டு வருகிறது. குடும்பத்தில் ஒரு மீனவருக்கு ரூ.8000 வரை நிவாரணத்தொகை வழங்கப்படும்.
இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 39 ஆயிரத்து 787 பேருக்கு நிவாரணத்தொகை வழங்க மீன் வளத்துறையினர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். நிவாரணத் தொகையை அரசு விரைவில் மீனவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்த உள்ளது.
மேலும்
-
லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
-
அமெரிக்க போர் விமானம் செங்கடலில் விழுந்து விபத்து: கடற்படை தகவல்
-
ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!
-
மனைவியை கொலை செய்து பரோல் கைதி தற்கொலை
-
கிராம தலைவர் குத்திக்கொலை ஆர்.எஸ்.மங்கலத்தில் பரபரப்பு
-
செவிலியரான துாய்மை பணியாளர் குடந்தை ஜி.ஹெச்.,சில் அவலம்