மீன் பிடி தடைக்காலத்தில் தடையை மீறி செயல்படும் படகுகள் மீது நடவடிக்கை

ராமநாதபுரம்: -மீன் பிடி தடைக்காலத்தில் தடையை மீறி செயல்படும் படகுகள் மீது நடவடிக்கை கோரி மீன் வளத்துறை துணை இயக்குநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

பாம்பன் அக்காளமடம் பகுதியை சேர்ந்த செந்துார் கணேஷ் மீன் வளத்துறை துணை இயக்குநர் கோபிநாத்திடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நான் சிறிய அளவிலான நாட்டுப்படகு வைத்து மீன் பிடி தொழில் செய்து வருகிறேன். 2 முதல் 3 நாட்டிகல் மைல் வரை வலை விட்டு மீன் பிடிக்கும் மீனவர்களின் தொழிலை கெடுக்கும் விதமாகவும், இந்திய, இலங்கை மீன் பிடி பிரச்னையை துாண்டி விடும் வகையில் அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார் இயந்திரங்கள் பொருத்தி மீன் பிடித்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒரு சிலர் கெடுத்து வருகின்றனர்.

விதிகளை மீறி மீன் பிடி தொழிலில் ஈடுபடும் படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement