பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி

திருவாடானை: இரவில் தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்ற பெண்ணிடம் டூவீலரில் சென்ற வாலிபர்கள் தங்கச் செயினை பறிக்க முயன்றனர்.திருவாடானை சிநேகவல்லிபுரத்தை சேர்ந்தவர் அன்னலட்சுமி 45. நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு சிநேகவல்லிபுரத்தில் தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார்.

அப்போது டூவீலரில் சென்ற மூன்று வாலிபர்கள் (ெஹல்மெட் அணிந்திருந்தனர்) அன்னலட்சுமி கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றனர்.

அன்னலட்சுமி செயினை இறுக்கமாக பிடித்துகொண்டு அவர்களுடன் சண்டை போட்டார்.

கூச்சல் கேட்டு குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த மற்ற பெண்கள் ஓடி வந்தனர். அச்சமடைந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதி பெண்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement