2 பேர் காயம்

ஆர்.எஸ்.மங்கலம்: திருச்சி விமான நிலையம் பகுதியைச் சேர்ந்த போத்திராஜா மகன் பிரவீன் 24, இவர் காரில் நண்பர்களுடன் நேற்று முன்தினம் ராமேஸ்வரம் சென்று விட்டு நேற்று மாலை ஊர் திரும்பினர். திருச்சி - ராமேஸ்வரம் சாலை சோழந்துார் பஸ் ஸ்டாப் அருகே எதிரே வந்த டிராக்டர் காரில் மோதியது.

காரில் இருந்த திருச்சியை சேர்ந்த பிரவீன் 24, திருச்சி ஐயப்பன் நகர் ஷேக் அப்துல்லா மகன் ஆரிப் 24, ஆகியோர் படுகாயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

டிராக்டர் டிரைவர் சீனாங்குடி கோவிந்தராஜ் மகன் ராம்கி 21, மீது திருப்பாலைக்குடி போலீசார் வழக்கு பதிந்தனர்.

Advertisement