தண்ணீர் வசதி இல்லாத கோமாளிப்பட்டி பள்ளி

சிவகங்கை: சிவகங்கை அருகே உள்ள கோமாளிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் அடிப்படை வசதியான குடிநீர் வசதி, கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லை. இதனால் மாணவர்கள் சிரமப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கு தனியாக போர்வெல் அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisement