ஆசிரியர் கூட்டணி கூட்டம்

சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் புரட்சிதம்பி தலைமை வகித்தார். செயலாளர் சகாய தைனேஷ் தீர்மானங்களை வாசித்தார். -

மானாமதுரையில் மாடியில் இயங்கும் வட்டார கல்வி அலுவலகத்தை தரைத்தளத்திற்கு மாற்ற வேண்டும். ஆசிரியர்களுக்கான மாதாந்திர வருமான வரி பிடித்தத்தில் உள்ள குழப்பத்தை நீக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement