இவரா... அவரா... எவரு... : மதுரை பைபாஸ் ரோட்டில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது யார்

மதுரை, ஏப். 29- மதுரை பைபாஸ் ரோடு பகுதி தேசிய நெடுஞ்சாலைத்துறை டிராவலர்ஸ் பங்களா அருகே வாகனங்களுக்கு ரசீது வழங்காமல் 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கின்றனர். மாநில, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் இதுகுறித்து தங்களுக்கு தெரியாதென கைவிரிப்பதால் வசூலிப்பது யார் என்பது மர்மமாக உள்ளது.
மதுரை பழங்காநத்தம் முதல் பாத்திமா கல்லுாரி வரை 6 கி.மீ., ரோடு பல ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் இருந்தது.
தற்போது மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ளது. இந்த ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் 'டிராவலர்ஸ் பங்களா' உள்ளது. அதிக பயன்பாடின்றி உள்ள இந்த பங்களா மற்றும் அருகில் உள்ள பகுதிகள் வர்த்தக நிறுவனங்களுக்கு வரும் வாகனங்கள் நிறுத்த பயன்படுகிறது. வாகன ஓட்டிகளிடம் ரசீது வழங்காமல் 'பார்க்கிங்' கட்டணம் வசூலிப்பதாக புகார் கிளம்பியுள்ளது.
இதனை வசூலிப்பது மாநகராட்சி அல்ல என்பதால் நெடுஞ்சாலைத் துறையினரே வசூலிப்பதாக வாகன ஓட்டிகளிடம் சந்தேகம் எழுந்துள்ளது. ரோடு மாநில நெடுஞ்சாலைத்துறையில் உள்ளதால் அத்துறையினரா, அருகில் டிராவலர்ஸ் பங்களா உள்ளதால் தேசிய நெடுஞ்சாலைத் துறையா என்ற சந்தேகம் உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
கைவிரிக்கும் அதிகாரிகள்
தேசிய நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் முருகனிடம் கேட்டபோது, ''எங்களுக்கும் இதுகுறித்த புகார் வந்தது. டிராவலர்ஸ் பங்களாவைச் சுற்றி கயிறுகட்டி வைத்துள்ளோம்.
எனவே வாகனங்கள் அப்பகுதியை தாண்டித்தான் நிறுத்துவர். அவர்களிடம் வேறு யாராவது வசூலித்திருக்கலாம். எங்கள் ஊழியர்கள் இதில் ஈடுபடவில்லை'' என்றார்.
மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் மோகனகாந்தியிடம் கேட்டபோது, ''இதுபற்றி தகவல் இல்லை. நெடுஞ்சாலைத் துறை ரோட்டில் நிறுத்த கட்டணம் வசூலிக்கும்படி யாரிடமும் தெரிவிக்கவில்லை. அதுபோன்ற புகார் எதுவும் வரவில்லை'' என்றார்.
மேலும்
-
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு: சவரன் ரூ.320 உயர்ந்து விற்பனை
-
அடங்காமல் ஆடும் பாகிஸ்தான் ராணுவம்; 5வது நாளாக எல்லையில் அத்துமீறல்; இந்திய ராணுவம் பதிலடி
-
சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
-
மைதானத்தில் கடைகள் அகற்றம்
-
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
-
ராட்சத குழாய் வால்வு பழுது; பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீண்