ராட்சத குழாய் வால்வு பழுது; பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீண்

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அருகே சென்னைக்கு குடிநீர் செல்லும் ராட்சத குழாயின் வால்வு பழுதாகி தண்ணீர் வீணாக வழிந்தோடியது.
சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி வீராணம் ஏரியிலிருந்து சென்னை மெட்ரோ நிறுவனம் விநாடிக்கு 73 கன அடி வரை தண்ணீர் எடுத்து சென்னை மக்களின் தேவைக்காக ராட்சத குழாயில் அனுப்பி வருகிறது. பூதங்குடியில் வீராணம் ஏரி அருகே மெட்ரோ நிறுவன பம்ப் ஹவுசில் துவங்கும் மெட்ரோ குடி தண்ணீர் செல்லும் குழாய் 240 கி.மீ., துாரம் கடந்து சென்னை செல்கிறது. பம்பிங் செய்யும் போது ஆங்காங்கே காற்று உள் வாங்கி, வெளியே தள்ளும் வால்வுகள் பொருத்தப்பட்டு, மெட்ரோ பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பால்பண்ணை அருகே பொருத்தப்பட்டுள்ள ராட்சத குழாய் வால்வில் தண்ணீர் செல்லும் அழுத்தம் காரணமாக நேற்று மதியம் பழுதாகி 3:00 மணிக்கு பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் பீய்ச்சியடித்து வெளியேறியது.
தகவலறிந்த மெட்ரோ நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து வால்வை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தண்ணீர் வெளியேறுவது மாலை 6:30 மணிக்கு சரி செய்யப்பட்டது.
மேலும்
-
அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கு: போலீசாருக்கு ரூ.1 அபராதம் விதித்தது மனித உரிமை ஆணையம்
-
தி.மு.க., பீர் விருந்து; இ.பி.எஸ்., விமர்சனம்
-
முஜிபுர் ரஹ்மான் படம் கொண்ட ரூபாய் நோட்டுகள் நிறுத்தம்; நெருக்கடியில் வங்கதேசம்!
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை