மே 1 முதல் யோகா பயிற்சி
மதுரை; மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் ஒருமாதம் எல்லா வயதினரும் மிக எளிமையாக செய்யக்கூடிய ஆசனம், ஓய்வு உத்திகள், பிராணாயாமம் மற்றும் தியானப் பயிற்சி மே 1ல் துவங்குகிறது. தெப்பக்குளம் கீதா நடனகோபால நாயகி மந்திரில் தினமும் இருபாலருக்கும் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையும், பெண்களுக்கு அருகில் உள்ள டாக்டர் கோகுல்நாத் பாலாஜி நர்சிங் ஹோமில் காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரையும் நடக்கிறது.
உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நோய், சுவாசப் பிரச்னைகள், பல்வகை உடல் வலி, கருப்பை, ஹார்மோன் பிரச்னை, உடல் பருமன், மன அழுத்தத்திலிருந்து விடுதலைப் பெற இப்பயிற்சி உதவும்.
முன்பதிவுக்கு இயக்குநர் கே.பி. கங்காதரனை 88834 21666ல் தொடர்பு கொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு: சவரன் ரூ.320 உயர்ந்து விற்பனை
-
அடங்காமல் ஆடும் பாகிஸ்தான் ராணுவம்; 5வது நாளாக எல்லையில் அத்துமீறல்; இந்திய ராணுவம் பதிலடி
-
சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
-
மைதானத்தில் கடைகள் அகற்றம்
-
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
-
ராட்சத குழாய் வால்வு பழுது; பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீண்
Advertisement
Advertisement