'எழுதிக்கொடுங்கள்' கவுன்சிலர்கள் ஆவேசம்

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டம் தலைவர் சுவிதா தலைமையில் நடந்தது. உதவி கமிஷனர் பார்த்தசாரதி, பொறியாளர்கள் பங்கேற்றனர். மேற்கு மண்டலத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.

கவுன்சிலர்கள் காவேரி, கருப்பசாமி, முருகன், ரவி, இந்திராகாந்தி, விஜயா, முத்துலட்சுமி, தமிழ்ச்செல்வி, லக்சிகா பேசியதாவது:

அனைத்து வார்டுகளிலும் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பால் பணிகளை நிறைவேற்ற முடியவில்லை. பலமுறை கோரிக்கை வைத்தும் பலனில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாது என்றால் அதிகாரிகள் எழுதிக் கொடுத்து விடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றனர்.

Advertisement