ஓய்வூதியர் சங்கம் அதிருப்தி

மதுரை: தமிழ்நாடு அனைத்து நான்காம் பிரிவு ஓய்வூதியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ராமச்சந்திரன் கூறியிருப்பதாவது:

முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்கு சலுகை என்ற பெயரில் 9 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது ஏமாற்றம் தருவதாக உள்ளது. சென்னையில் போட்டா ஜியோ கூட்டமைப்பு நடத்திய தர்ணா போராட்டத்தின் விளைவாக அறிவிப்புகள் வந்துள்ளன.

மத்திய அரசு அறிவித்த 2 சதவீத அகவிலைப்படி உயர்வை மாநில அரசும் வழங்கி உள்ளது. 1.4. 2026ல் சரண் விடுப்பு என்று அறிவித்ததை மாற்றி, வரும் அக்டோபரில் என அறிவித்துள்ளது பெரிய ஏமாற்றம்.

இதனை ஏப்.1 முதல் என அறிவித்திருந்தால். ஜூனில் பள்ளி திறக்கும் போது பயனுள்ளதாக இருந்திருக்கும்.

மிகவும் எதிர்பார்த்த பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்காததும் ஏமாற்றமே. கல்விக்கடன், திருமண கடன், பண்டிகை முன்பண அறிவிப்பு என்பது வட்டி இல்லா கடன். அதுபோல் காலிப் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு இல்லாததும் ஏமாற்றம்தான் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement