தேடப்படும் குற்றவாளிகள்

மதுரை: சென்னை வளசரவாக்கம் நிரோசன் என்ற ரோமியோ. கொள்ளை, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் மதுரை புதுார் போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர் மீது 2019 முதல் பிடிவாரன்ட் நிலுவையில் உள்ளது. இவரை தேடப்படும் குற்றவாளியாக மதுரை ஜே.எம். கோர்ட் எண் 6 அறிவித்து, மே 21க்குள் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

மானாமதுரை அகதிகள் முகாமைச் சேர்ந்த சதீஷ்குமார் கள்ளநோட்டு வழக்கில் புதுார் போலீசாரால் கைது செய்யப்பட்டு பிடிவாரன்ட் 2013 முதல் இருந்து வருகிறது. இவரையும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து மே 29க்குள் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement