தொழில் முனைவர் பயிற்சி முகாம்

மதுரை: உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் உணவு தரப்படுத்துதல் தொழில் முனைவர்களுக்கான பயிற்சி முகாம் கொட்டாம்பட்டியில் நடந்தது.

களஞ்சியம் வட்டாரத் தலைவி சுலக்சனா வரவேற்றார். உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் இளங்கோவன் பயிற்சி நோக்கத்தை விளக்கினார்.

நிர்வாகி கார்த்திகா உணவு குறித்து பேசினார். பயிற்சியில் பங்கேற்ற 184 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தானம் அறக்கட்டளை திட்ட நிர்வாகி செந்தில்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.

Advertisement