கட்டுமானப்பொருட்களுக்கு அரசே விலை நிர்ணயிக்க வேண்டும் இன்ஜினியர்ஸ் கிளப் வலியுறுத்தல்
தேனி: கல் குவாரிகளை அரசு செயல்படுத்தி கட்டுமான பொருட்களுக்கு விலையை அரசே நிர்ணயிக்க ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகத்தில் இன்ஜினியர்கள் மனு அளித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இன்ஜினியர்ஸ் கிளப் தமிழ்நாடு அமைப்பு தேனி மண்டல தலைவர் தேவ் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கிய மனுவில், 'ஆந்திராவில் கிரஷர் சார்ந்த கட்டுமான பொருட்கள் யூனிட் ரூ.1400க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரே ஆண்டில் 4 முறை விலை ஏற்றி, தற்போது யூனிட் ரூ.7500க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வினால் கட்டுமான தொழில், தொழிலாளர்கள் பாதிப்படைகின்றனர். குவாரிகளை அரசு உடைமயாக்கி அரசு நடத்த வேண்டும்.
கட்டுமான பொருட்கள் விலை நிர்ணய ஆணையம் அமைக்கவேண்டும். கல் குவாரிகள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். விலை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கோரினர்.
உத்தமபாளையம் நாராயணத்தேவன்பட்டி பொதுமக்கள் சார்பில் பொன்னாங்கன் வழங்கிய மனுவில், 'நாராயணத்தேவன்பட்டியில் புதிய கழிவு நீர் அமைக்க ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தோம். ரோடு, கால்வாய் அமைக்க ஏலம் விடப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால், இதுவரை பணிகள் துவங்க வில்லை. ரோட்டில் கழிவு நீர் செல்வதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. நடவடிக்கை எடுக்க கோரினர்.
அங்கன்வாடி பணி கோரி மனுக்கள் அதிகம்மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி இருந்தது.
கடைசி தேதியும் முடிந்து விட்டது. ஆனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்துவந்த பெண்கள் அங்கன்வாடி பணி வழங்க வேண்டும், முன்னரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 35க்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கினர்.
பெட்ரோலுடன் வந்த மூதாட்டிகலெக்டர் அலுவலகத்தில் கடந்த வாரம் அங்கன்வாடி பணியாளர் ஒருவர் பூச்சி மருந்து குடித்து மனு அளிக்க வந்தார். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மனு அளிக்க வருபவர்கள் கொண்டு வரும் பொருட்களை சோதனை செய்து மனு அளிக்க அனுமதிக்கப்படுகினறனர்.
பெரியகுளம் தாலுகா கைலாசப்பட்டி காமராஜர் தெரு முத்தம்மாள் மனு அளிக்க வந்தார். அவரை போலீசார் சோதனை செய்த போது, பாட்டிலில் பெட்ரோல் கொண்டு வந்திருந்தார். அதனை பறிமுதல் செய்து அவரை எச்சரித்தனர்.பின் கலெக்டர் அலுவலகத்தில் மனுஅளிக்க அனுப்பி வைத்தனர்.
மேலும்
-
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு: சவரன் ரூ.320 உயர்ந்து விற்பனை
-
அடங்காமல் ஆடும் பாகிஸ்தான் ராணுவம்; 5வது நாளாக எல்லையில் அத்துமீறல்; இந்திய ராணுவம் பதிலடி
-
சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
-
மைதானத்தில் கடைகள் அகற்றம்
-
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
-
ராட்சத குழாய் வால்வு பழுது; பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீண்